தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள்: ஆலோசனை பெற இலவசத் தொலைபேசி எண் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள்: ஆலோசனை பெற இலவசத் தொலைபேசி எண் அறிமுகம்


ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாகப் பயில்வதற்கான ஆலோசனை பெற இலவசத்தொலைபேசி எண்ணை தன்னார்வத் தொண்டு நிறுவனம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இது குறித்து "பூமி' தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில் எவ்வித கட்டணமின்றி 6 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்கு மத்திய, மாநில அரசு இணைந்து கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.இதன்படி, ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு தனியார் பள்ளியில் வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க வேண்டும்.அதன்பிறகு, எவ்வித கல்விக் கட்டணம், நன்கொடை ஏதும் பெறாமல் இலவசமாக கல்வி பயில்வதற்கு அனைத்து வசதிகளையும் பள்ளி நிர்வாகம் ஏழை குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும்.எனவே, கல்வி உரிமைச் சட்டத்தின் படி 8-ஆம் வகுப்பு வரை தங்கு தடையின்றி தனியார் பள்ளியில் கல்வி கற்கலாம்.இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு, தனியார் பள்ளிகளுக்கு முறையாக மானியம் வழங்குவதில்லை என தனியார் பள்ளி நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அண்மையில், தேவையான மானியத்தொகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தினார்.இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் 8144-22-4444 என்ற இலவச சேவை எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணில் "மிஸ்டு கால்' கொடுப்பதன் மூலம் தனியார் பள்ளிகள் சேர்க்கை குறித்து ஆலோசனை பெறலாம் என்றார். இதுகுறித்து"பூமி' தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வித் துறை செயலருக்கு வழங்கிய மனுவில் கூறியதாவது:கல்வி உரிமைச் சட்டத்தின் 12(1) பிரிவின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1.43 லட்சம் இடங்கள் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகள் கல்வி பயில்வதற்கான கல்வி உரிமைச் சட்டத்தினை வெளிப்படையாக அமல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி