பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா-விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2015

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா-விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார்


விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி 18-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
இம்மாவட்டத்தில் 75 தேர்வு மையங்களில் 192 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 22,306 பேர் தேர்வு எழுதினர். இதில், 21737 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட, 1.34 சதவீதம் கூடுதலாகும்.மேலும், மாநில அளவில் கடந்த ஆண்டு இழந்த முதலிடத்தையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கான பாராட்டு விழா ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையில் சிவகாசி அருகே உள்ள பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது.இவ்விழாவில் மாவட்ட அளவிலும், ஒவ்வொரு பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது.அதேபோல், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 99 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் கேடயம் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி