ஓய்வூதியம், 2 காப்பீட்டுத் திட்டங்கள் மோடி தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

ஓய்வூதியம், 2 காப்பீட்டுத் திட்டங்கள் மோடி தொடங்கி வைத்தார்


ஒரு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2 காப்பீட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.கடந்த மத்திய பட்ஜெட்டில், ஏழைகளும் பயன்பெறும் வகையில், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பிரதமரின் வாழ்க்கை ஒளித் திட்டம் என்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டமும், பிரதமரின் பாதுகாப்பு திட்டம் என்ற விபத்து காப்பீட்டு திட்டமும்,அடல் பென்ஷன் யோஜனா என்ற ஓய்வூதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த 3 திட்டங்களையும் கொல்கத்தாவில் இன்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் படி, ஆண்டுக்கு ரூ.330 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பயன்பெறலாம். அதேபோல், விபத்து காப்பீட்டு திட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பெறலாம்.ஓய்வூதித்திட்டத்தின்படி, மாதம் ரூ.48 முதல் ரூ.210 வரை செலுத்தி, ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி