அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க இன்னும், இரு நாட்களே உள்ளன.
நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும், இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வரும், 31ம் தேதி சிறப்புத் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாவட்டங்களில், இரண்டு முதல் நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், கடந்த, 30ம் தேதி வரை, மூன்று லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வரும், 6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஏற்கனவே, மே, 1, 2, 3 தேதிகள் விடுமுறை நாட்கள் என்பதால், விண்ணப்பம் பதிவு செய்யும் பணி நடக்கவில்லை.
எனவே, இன்று முதல் மூன்று நாட்களுக்கு சேவை மையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க, சேவை மையங்களில் கூடுதல் ஊழியர்களை, கணினியுடன் பணியில் அமர்த்தும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை, 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணிக்கான, 4,362 பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை தேர்வு அறிவித்து உள்ளது.
நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும், இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வரும், 31ம் தேதி சிறப்புத் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாவட்டங்களில், இரண்டு முதல் நான்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், கடந்த, 30ம் தேதி வரை, மூன்று லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வரும், 6ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஏற்கனவே, மே, 1, 2, 3 தேதிகள் விடுமுறை நாட்கள் என்பதால், விண்ணப்பம் பதிவு செய்யும் பணி நடக்கவில்லை.
எனவே, இன்று முதல் மூன்று நாட்களுக்கு சேவை மையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க, சேவை மையங்களில் கூடுதல் ஊழியர்களை, கணினியுடன் பணியில் அமர்த்தும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி