4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுவெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுவெளியீடு


அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்குஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.

இது தொடர்பாகஅரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளி ஆய்வக உதவியா ளர் (லேப் அசிஸ்டென்ட்) பணிக் கான தேர்வு மே 31-ம் தேதி நடை பெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட அனு மதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்திலிருந்து (www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். இந்த இணையதளத்தில் “Lab Assistant Screen Test Exam Hall Ticket Download” என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் திரையில் தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு டவுன் லோடு என்பதை க்ளிக் செய்தால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதி விறக்கம் ஆகும். அதை பிரின்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார். ஆய்வக உதவியாளர் பணியில் 4,362 காலியிடங்களுக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி