சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா?


அக்னி வெயில் சுட்டெரித்து வருவதால் புதுச்சேரி அரசு, பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள்திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. அக்னி வெயில் காலம் முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழகத்தின் தென் மாவட்டங் களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் சென்னை உட்பட வடமாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் கடந்த 21, 22, 23 ஆகிய தேதிகளில் 41 டிகிரி செல்சியஸும், 24-ம் தேதி மற்றும் நேற்று முறையே 40 மற்றும் 42 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது. வேலூரிலும் கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி வருகிறது. புதுச்சேரியில் அதிகபட்சமாக நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.கோடை வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 1-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சில 5-ம் தேதியும், சில பள்ளிகள் 9-ம் தேதியும் தொடங்கவுள்ளன.புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் 2-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை அம்மாநில அரசு ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நேற்று உத்தரவிட்டது.புதுச்சேரியைவிட தமிழகத்தில் வெயில் அதிகரித்துள்ளதால் இங்கும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொருளாளர் ஜம்பு கூறும்போது, ‘‘கடந்த 2013-ம் ஆண்டு வெயில் காரணமாக ஒரு வாரம் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் திறப்பை அரசு தள்ளி வைத்து அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், ‘‘தமிழக அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி