ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு வெளியானது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2015

ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு வெளியானது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யுனைட் 3 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ.6,999க்கு வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தளத்தில் இந்தஸமார்ட்போனை வாங்குபவர்களுக்கு வோடாஃபோன் 500 எம்பி (2ஜி/3ஜி) டேட்டாஇலவசமாக வழங்குகின்றது.மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை போன்றே இந்த மாடலிலும் 10 மொழி வரை சப்போர்ட் செய்கின்றது.
மேலும் மொழி மாற்றும் வசதியையும் சிறிய ஸ்வைப் மூலம் செய்ய முடியும்.மைக்ரோமேக்ஸ் யுனைட் 3 டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப், 4.7 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்தவரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ், 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. GPRS/ EDGE, வை-பை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி