7243 செவிலியர் பணிகள்: போட்டித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2015

7243 செவிலியர் பணிகள்: போட்டித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 7243 செவிலியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசின் மருத்துவ சேவைகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அறிவிப்பு எண்: 01/2015

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி: 19.04.2015

பணி: Nurse (செவிலியர்)

மொத்த காலியிடங்கள்: 7243. இதில் 6792 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.7,700 வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் காலியிடங்கள் ஏற்படுவதை பொறுத்து பணி நிரந்தரம் செய்யப்படும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின் படி 18 - 58க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் (பெண்கள்): மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் 3 வருட ஜெனரல் நர்சிங் டிப்ளமோ முடித்து 6 மாத கால Midwifery பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும்.

செவிலியர் (பெண்கள்): மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் 3வருட ஜெனரல் நர்சிங் டிப்ளமோ முடித்து 6 மாத கால Psychiatry பயிற்சியையும் முடித்திருக்க வேண்டும். அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.மேற்கண்ட தகுதிகளுடன் Tamil Nadu Nurse and Midwives Council -லில் நிரந்தர பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்டும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்டது. கொள்குறி வகை கேள்விகளைக் கொண்டதாக அமைந்திருக்கும். தேர்வு இரண்டரை மணி நேரம் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2015

எழுத்துத் தேர்வு மையங்கள்:

சென்னை - 01

திருச்சிராப்பள்ளி - 02

மதுரை - 03

திருநெல்வேளி - 04

கோயம்புத்தூர் - 05

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.300. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.05.2015

இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி