மாணவர்கள் அனைவரையும் 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி செய்ய வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2015

மாணவர்கள் அனைவரையும் 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி செய்ய வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருப்பூர் மாவட்டத்தில் 8–ம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்றது. 1000–க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். கட்நத 11–ந் தேதி தொடங்கிய தேர்வு முடிவடைந்தது. தேர்வு எழுதியவர்களில் 500–க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.அவர்கள் ‘நாங்கள் வாழ்க்கை போராட்டத்துக்காகத்தான் தேர்வு எழுதியுள்ளோம்.
மாணவர்கள் அனைவரையும் கண்டிப்பாக 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தேர்வு எழுதியஅனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும். கனரக வாகனங்கள் ஓட்டுபவர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் பேட்ஜ் வழங்குவார்கள். எனவே எங்களை கண்டிப்பாக பாஸ் செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

1 comment:

  1. padika vendiya kalathula padikama ipo vandhu pass podanuna ena artham..
    summa pass podanuna apo ethuku exam,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி