ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2015

ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015

27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள்முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர்திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர்திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன்,பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரைநேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மாநிலத் திட்ட இயக்குநர், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோர் தெரிவித்தசெய்திகள்:

1 . தற்போதைய பணிப் பளு, ஆள் பற்றாக்குறையின் காரணமாக தற்போது முதற்கட்டமாக்500 ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள்.

2.  தற்போது பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல்நடைபெற்ற பின்னர் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி கலந்தாய்வு நடைபெறும்.

3. பள்ளிக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கும்போது 1 : 2 விகிதத்தில் பாடவாரியாக தரம் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்விற்குஅழைக்கப்படுவர்.

4. விரைவில் 819 புதிய பணியிடங்களுக்கு டெட் தகுதி பெற்ற நபர்களுக்கு ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு புதிய பயிற்றுநர்கள்பணியமர்த்தப்படுவார்கள்.

5. புதிய பணியிடங்களை நிரப்பும் முன்பு 819 (தோற்றுவிக்கப்படுபவை) + 500(பள்ளிக்கு பணி மாறுபவர்களின் காலிப்பணியிடம்) = 1319 பணியிடங்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இக்கலந்தாய்வில் வெளி மாவட்டங்களுக்குபணிநிரவலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

6.நிலையான பயணப்படி ரூ.1000 /-க்கு அதிகமாக வழங்கப்படும்.

மாநிலத் தலைவர்

8 comments:

  1. உங்களுக்கு இயக்குநர் அலுவலகங்களின் வாசலில் நின்று புகைப்படம் எடுப்பதே பெரிய விஷயம். ஆனால், எங்களின் உண்மையான தலைவர் மாதம் இருமுறை நேரடியாகப் பேசிவருகிறார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு என்னாச்சு? இன்று நீங்கள் சொல்வதையெல்லாம் 22.05.2015 அன்றே சொல்லிட்டாங்க……...களே! எதாவது புதுசா ஆணி ………...ங்களா? பழைய சோறு வேண்டாம் எங்களுக்கு. உண்ணாவிரதம் வீரமாய் இருந்துசவிட்டு, இப்போது கெஞ்சுவது ஏன்? தனிபிரிவு மனுவெல்லாம் பழைய கதை தலீவரே! ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு எதாச்சும் நல்லது செய்தது ஒன்று சொல்லுங்க தலீவா? ம்ம்…………………….ம்…...முடியலயா?

    ReplyDelete
  2. மா…..உண்ணாவிரதத்திற்காக ஆசிரியர்பயிற்றுநர்களிடம் மிரட்டி தலா ரூ.1000 வசூல் செய்த 400000/- (நான்கு லட்சங்கள்) தொகைக்கான கணக்கு என்னாச்சு? குடும்பத்தோடு உண்ணாவிரத இருந்துவிட்டு, ஆசிரியர்பயிற்றுநர்களாக கணக்கு பூஜ்ஜியங்களை சேர்த்துகொண்டு, பொய்யான எண்ணிக்கை காட்டியது உண்மை இல்லை எனில் மாவட்டம் வாரியாக பெயர்பட்டியல் வெளியிட வேண்டும். கையொப்பம் வாங்கியதை உமது websiteல் போடுங்கள், தைரியம், திராணி இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டியதுதானே, எங்களை ஏமாற்றதீர்கள்!

    ReplyDelete
  3. மிகவும் அருமை. அற்புதமான பதிவு. தொடர்ந்து ஒவ்வொரு பதிவையும் இமை மூடாமல் சமீப காலத்தில் உற்று நோக்கியதில் இது வரை கல்வி செய்தியில் என்னை சுண்டி இழுத்தது இதுவாக கூட இருக்கலாம்.......

    ReplyDelete
  4. கல்வித் துறையில் நான் தொடர்ந்து பணியாற்றியும், கல்வித் துறை தொடர்புக்கு அப்பாற்பட்டு ஒரு சிலர் PG Second List and PG Welfare list வருகிறது என்றும் புரளி பரப்பனை செய்து வருகிறார்கள். அதை பார்க்கும் போது ஒரு சிலர் பலர் அல்ல அவர்கள் நெஞ்சில் பாலை வார்க்கின்றது போல் நஞ்சை வார்ப்பது கொடியதல்லவா? இந்த மாத இறுதியில் PG adw list வந்து விடும் என்ற செய்தியும் ஒருவர் மறுவினை ஆற்றியதை பார்த்து என் வாயில் சிரிப்பு வரவில்லை. சிரிப்பு வந்தது.....

    ReplyDelete
    Replies
    1. இது கூட பரவாயில்லை சார் 90and above க்கு கண்டிப்பாக வேலை என்று கூசாமல் பொய் களை இங்கு பரப்புகிறார்கள் .இவர்களை நினைத்தால் வேதனையாக உள்ளது ஒரு விளம்பரம் கொடுத்து அந்த பணியிடம் நிரப்பி விட்ட பிறகு எங்கிருந்து பணியிடம் வரும் என்பது கூட தெரியாமல் இவர்கள் புரளி கிளப்பி விடுகிறார்கள் அதை நம்பி பாவம் மற்றவர்கள் எப்பொழுது என்று இங்கு கமெண்ட்ஸ் வேறு இவர்களை நினைத்தால் கோபமாக இருக்கிறது..என்ன செய்வது ...

      Delete
  5. சங்கத்தால் தனி மனிதன் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. சங்கம் சங்க நிதி என்று வந்தவருக்கு இது வரை நிதி தரவில்லை. ஆனாலும் என் அம்மா வயதை போன்றோருக்கு நிதி அளித்தது என் நெஞ்சு முழுக்க நிரம்பி உள்ளது

    ReplyDelete
  6. DEAR ADMIN PLEASE HELP

    3 SOCIAL TEACHER

    POST ALOT RATIO 2 HISTORY 1 GEOGRAPHY ANY G.O

    PLEASE HELP

    Dear Admin & Friends

    please send my mail id

    raajali123@gmail.com

    thank you,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி