அரசு ஊழியர்களுக்கு இந்த மாதமும் சம்பளம் தாமதம் வங்கி நடைமுறை மாற்றமே காரணம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2015

அரசு ஊழியர்களுக்கு இந்த மாதமும் சம்பளம் தாமதம் வங்கி நடைமுறை மாற்றமே காரணம்


வங்கி நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழகத்தில் அரசுஊழியர்கள், ஆசிரியர் கள் சம்பளம் பெறுவதில் இந்த மாதமும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான சம்பள பட்டியலை சம்பந்தப் பட்ட துறையின் கணக்குப் பிரிவு அலுவலர், மாத இறுதியில் கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அனுப்புவார். அங் கிருந்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு பட்டியல் அனுப்பப்பட்டு, அரசு ஊழியரின் வங்கிக் கணக் கில் நேரடியாக செலுத்தப் படுவது வழக்கமான நடைமுறை. மாத இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாத முதல் தேதியோ சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும். கடந்த மாதம் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்ட தால் 6-ம் தேதிதான்அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிக் கப்பட்டது. இந்நிலையில், இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தாமதமாகியுள்ளது.

இது குறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறியதாவது: தலைமைச் செயலக ஊழி யர்கள் மற்றும் சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 30-ம் தேதியே சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. பெரும் பாலான முதுநிலை ஆசிரியர் களுக்கும் சம்பளம் வழங் கப்பட்டுவிட்டது. மற்றவர் களுக்கான சம்பளம் இன்னும் வர வில்லை.

சம்பளத்தை பிரித்தனுப்பும் ‘கோர் பாங்கிங்’ திட்டம் தொடர்பான அமைப்பை சென்னையில் இருந்து மும்பைக்கு ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அங்கிருந்துதான் ஊழியர்களின் வங்கிக் கணக்குக்கு சம்பளம் மாற்றப்படுவதாக கூறப்படு கிறது. இதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக தாமதமாகியுள்ளது. இன்று (4-ம் தேதி) அல்லது நாளை கிடைத்துவிடும் என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சம்பளத்தை பிரித்தனுப்பும் ‘கோர் பாங்கிங்’ திட்டம் தொடர்பான அமைப்பை சென்னையில் இருந்து மும்பைக்கு ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி