வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2015

வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்


பள்ளிப்பாட புத்தகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு, புத்தகம் விற்பனை செய்ய தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகங்களை வழங்கவில்லை. இதனால் போட்டித்தேர்வு எழுதுவோர், தனித்தேர்வர்கள், டுட்டோரியல் முறையில் தேர்வு எழுதுவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக வியாபாரிகளுக்கும், தமிழ்நாட்டு பாடநூல் கழகம்தான், புத்தகங்களை விற்பனை செய்கிறது. வியாபாரிகள், தனித்தேர்வர்கள், டுட்டோரியல் வாயிலாக படிப்பவர்கள்,போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள், ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் படிப்பவர்கள், பி.எட்., மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டு பாடநூல் கழகம், புத்தக வியாபாரிகளுக்கு புத்தகங்களை சப்ளை செய்ய மறுத்து விட்டது. பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பாடப்புத்தகங்கள்வந்து சேராததால், புத்தக வியாபாரிகள் மனம் உடைந்து போயுள்ளனர்.கோயமுத்தூர் புத்தக வியாபாரிகள் சங்க செயலாளர் காளியப்பன் கூறியதாவது: தமிழகம் முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், கோவை மாவட்டத்தில், 150 புத்தக வியாபாரிகளும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளித்திறப்பதற்கு முன்பே, எங்களுக்கு புத்தகம் கிடைத்து விடும். இந்தாண்டு இதுவரை எங்களுக்கு புத்தகம் வழங்கப்படவில்லை.

இதற்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர். இதே நிலை தமிழகம் முழுக்க நிலவுகிறது. இவ்வாறு, காளியப்பன் கூறினார்.தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் கூறுகையில், ''பள்ளிகளுக்கு புத்தகங்கள் சப்ளை செய்ய, அந்தந்த மாவட்ட குடோன்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் பின், வியாபாரிகளுக்கு சப்ளை செய்யப்படும். வியாபாரிகளுக்கு புத்தகம் வழங்கக்கூடாது என, எந்த உத்தரவும் இல்லை. அதனால் வியாபாரிகள் கவலைப்படத் தேவையில்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி