திறந்தநிலை பல்கலை.யில் இணையவழி படிப்புகள் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2015

திறந்தநிலை பல்கலை.யில் இணையவழி படிப்புகள் தொடக்கம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இணைய வழி பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் புதிய இணைய வழி படிப்பு முறையைத் தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக மும்பையைச் சேர்ந்த "ஸ்கூல்குரு எடுசர்வ்' தனியார் நிறுவனத்துடன் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
முதல் கட்டமாக 27 வகையான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் இணைய வழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய முறையில் சேரும் மாணவர்கள் இணைய வழியிலேயே சேர்க்கையையும், புத்தகங்கள் பதிவிறக்கத்தையும் வீட்டிலிருந்தபடியே செய்து கொள்ளலாம்.
அதோடு, தலைசிறந்த ஆசிரியர்களின் விடியோ வகுப்புகள், உரையாடல்கள், பாடங்களையும் செல்லிடப்பேசியிலேயே மாணவர்கள் பார்க்கலாம். இவை அனைத்தும் மெமரி கார்டில் (மைக்ரோ ஹெச்.டி. கார்டு) கொடுக்கப்படுவதால், இணைய இணைப்பும் தேவையில்லை.

அதோடு, இணையதளம் மூலமாக பேராசிரியர்கள், பிற மாணவர்களுடன் கல்வி தொடர்பாக உரையாடும் வசதியும் இந்த முறையில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்த மேலும் விவரங்களைப் பெற "TNOU" என 56767 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் போதுமானது. அல்லது www.tnouonline.ac.in என்ற இணையதளத்தையோ, 7810003388 என்ற செல்லிடப் பேசியையோ மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

1 comment:

  1. தூண்டில்

    நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
    அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
    "சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
    "நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
    "அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
    முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
    "இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
    "ஒருவரிடம் மட்டும்…"
    "என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
    "$1012347.64"
    "ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
    "முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
    கொஞ்சம் பெரிய தூண்டில்,
    அதைவிடப் பெரிய தூண்டில்,
    ஃபிஷிங் ராட்,
    ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
    பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
    "என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
    மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
    "அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி