அனுபவமிக்க ஆசிரியர்கள், கட்டமைப்புகள்இருந்தும், பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பழமையான மாவட்டங்களில் ஒன்றானகடலூர், கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் மொத்தம் 191 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளில் 23 ஆயிரத்து 792 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டுகளைவிட சற்று அதிகரித்துள்ள போதிலும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 13 ஆயிரத்து 434 பேர் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 10 ஆயிரத்து 545 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதேபோன்று அரசு நிதியுதவி பெறும் 29 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 8,402 மாணவர்களில் 7,218 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுபமிக்க ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வித கட்டமைப்புகள் இருந்த போதிலும், தேர்ச்சி சதவீதம் குறைவாகவே உள்ளது. ஆனால், படித்து முடித்து நேரடியாக பணிக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.
தனியார் பள்ளி நிர்வாகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களைக் கொண்டு தங்கள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி தேர்ச்சி சதவீதத்தை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவது கல்வியாளர்கள் மற்றும் ஏழை பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்து, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி