'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'-தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2015

'மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு தேவை'-தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை


தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில், கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என, தமிழ்நாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில், அரசு மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை விட,13 சதவீதம் அளவுக்கு குறைவாகத் தேர்ச்சி பெற்றன.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில், இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் விவாதித்தனர்.பின், சங்கத்தின் தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக அரசின், 14 வகை இலவச திட்டங்களை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களே கவனிக்க வேண்டி உள்ளது. கல்விப் பணிகளுக்குபோதிய நேரம் இல்லை. எனவே, இலவசத் திட்டங்களைக் கவனிக்க பள்ளிகளில் தனி அலுவலர் நியமிக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், முழுமையான தேர்ச்சி பெறவும், போட்டித் தேர்வுகளில் சிறந்த இடத்தைப் பெறவும், கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் முழுமையான தேர்ச்சி பெறும் வகையில், அரசின் பொதுத் தேர்வுகளை நடத்தஉரிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், மாணவர் சேர்க்கைஎண்ணிக்கையை, அப்பள்ளிகளின் விருப்பத்திற்கு விடாமல் வரைமுறைப்படுத்தி, கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி