தமிழகத்தில், அண்ணா பல்கலைக்குட்பட்ட பல பொறியியல் கல்லூரிகளில், ஐ.டி., படிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் எம்.சி.ஏ., - எம்.டெக்., படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில், 580 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலை சார்பில் இணைப்பும் புதுப்பிக்கப்படும். வரும் கல்வி ஆண்டுக்கான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரப் பட்டியல் அண்ணா பல்கலைக்கு வந்துள்ளது. இணைப்பு வழங்கும் பணியை அண்ணா பல்கலைமேற்கொண்டு வருகிறது. இணைப்பு கேட்டுள்ள பல கல்லூரிகள், புதிதாக, எம்.இ., - எம்.டெக்., போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளன. அதே நேரம் பல கல்லூரிகள்எம்.சி.ஏ., (மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) - எம்.இ., (ஐ.டி.,) - எம்.டெக்., போன்ற பாடப்பிரிவுகளை ரத்து செய்ய அனுமதி கேட்டுள்ளன. இதேபோல், ஒரு சில கல்லூரிகள், பி.இ., படிப்பில், ஐ.டி., பாடப் பிரிவில் மாணவர் மற்றும்பிரிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சிவில், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள் கேட்டுள்ளன.
இதுகுறித்து இன்ஜினியரிங் கல்லூரி வட்டாரங்கள் கூறியதாவது:ஐ.டி., துறை அனைத்து வகையிலும் முன்னேறினாலும், ஐ.டி., படித்தவர்கள் மட்டுமின்றி, மற்ற பாடப்பிரிவுகளில் படித்தவர்களும், ஐ.டி., நிறுவனங்களின், 'கேம்பஸ்' தேர்வில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இதனால், ஐ.டி., படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளதுடன், வேறு துறைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால், மாணவர்சேர்க்கையிலும் கடந்த சில ஆண்டுகளாக மந்த நிலையே உள்ளது. ஐ.டி., துறை தனியாக இல்லாமல், ஏதாவது ஒரு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், புவி அமைப்பியல்,ரசாயனவியல் என துறை சார்ந்து வளர்வதால், இந்தப் பாடப்பிரிவுகளில் படிப்போரும், ஐ.டி., பற்றி அதிகம் படிக்கின்றனர். மேலும் ஐ.டி., படிப்பும், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும் ஒரே படிப்பாக இருப்பதால், வெளிநாடுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்குத் தான், அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஐ.டி., என்பது, இந்தியாவில் மட்டுமே உள்ள பாடப்பிரிவாக உள்ளது. அதனால், கடந்தசில ஆண்டுகளில், ஐ.டி., படிக்க விரும்புவோர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவிலேயே அதிகம் சேர்கின்றனர். இதுபோன்ற பல காரணங்களால், ஐ.டி., பாடப்பிரிவுகளின் எண்ணிக்கையை, பல கல்லூரிகள் குறைக்க முடிவு செய்துள்ளன. இவ்வாறு கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி