தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2015

தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு


பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் கிடைக்காவிட்டால் பொறியியல், மருத்துவம், சி.ஏ., மற்றும் முன்னணி அறிவியல் பாடப் பிரிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. இதனால், சமூக அளவில் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், மிக மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் மாணவர்கள் முன்னணி இடத்துக்கு வராதது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பல வகையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அதனால், தற்போதைய நிலைமையை சமாளிக்க, அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தேர்ச்சி குறைவு மற்றும் மதிப்பெண் குறைந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள், பள்ளிகள் பட்டியல்களை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான செயல்பாடுகள் உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை இடமாற்றவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

12 comments:

  1. தனியார் பள்ளிகளுக்கு அனுமதிவழங்குவதை நிறுத்த வேண்டும்.ஏழை,நடுத்தர மக்கள்கூட தனியார் பள்ளிகளின் விளப்பர மாயையால் ஈர்க்கப்பட்டு தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்கிறார்கள்.அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள்,ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிகிறது.அதனை நிரப்ப முன் வரவேண்டும்.

    ReplyDelete
  2. தனியார் பள்ளிகளுக்கு அனுமதிவழங்குவதை நிறுத்த வேண்டும்.ஏழை,நடுத்தர மக்கள்கூட தனியார் பள்ளிகளின் விளப்பர மாயையால் ஈர்க்கப்பட்டு தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்கிறார்கள்.அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள்,ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிகிறது.அதனை நிரப்ப முன் வரவேண்டும்.

    ReplyDelete
  3. there is no safe for teachers side, so everey teachers have fear

    ReplyDelete
  4. all pass system is big struggle for all govt teachers upto 9th standard

    ReplyDelete
  5. மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வர்.... சூப்பர்.. சூப்பர்.. சூப்பப்பபர்.....

    ReplyDelete
  6. அம்மாவுக்கு வெற்றி.

    ReplyDelete
  7. Amma coming back. So much happy.

    ReplyDelete
  8. next election admk, great great

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி