அண்ணாமலை பல்கலை.,க்கு புது துணைவேந்தர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

அண்ணாமலை பல்கலை.,க்கு புது துணைவேந்தர்

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு, புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாக, கடந்த, 2013ம் ஆண்டு, ஏப்., 3ம் தேதி, பல்கலை, அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அரசின் முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா, பல்கலைக்கழகத்தின் நிர்வாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், உதவி நிர்வாக அதிகாரிகளாக, ஆர்.டி.ஓ.,க்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிறிஸ்துராஜ், மாலினி, ரத்தினசாமி, மாவட்ட கருவூல அதிகாரி ரவிச்சந்திரன், சட்ட ஆலோசகர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் என, 16 பேர், பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டனர். அரசு கட்டுப்பாட்டுக்கு வந்த பின், பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணைவேந்தராக இருந்த டாக்டர் ராமநாதன், கடந்த, 2013ம் ஆண்டு, ஏப்., 8ம் தேதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பதிவாளர் மீனாட்சிசுந்தரம் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய பதிவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக, ஐந்து பேர் கொண்ட பட்டியல், உயர்கல்வித் துறை மூலமாக, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஓர் ஆண்டுக்குப் பின், பேராசிரியர் மணியனை, 62; அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்து, கவர்னர், நேற்று முன்தினம் (7ம் தேதி) உத்தரவிட்டார். புதிய துணைவேந்தர் மணியன், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், தாவரவியல் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின், பணி நீட்டிப்பு அடிப்படையில், அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் உள்ளார். புதிய துணைவேந்தர், வரும் 13ம் தேதி, பொறுப்பேற்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி