தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடக்கும் எஸ்.ஐ., தேர்வில் பங்கேற்போருக்காக, மதுரையில் தினமலர் நாளிதழ் நடத்தும் இலவச பயிற்சி முகாம் நாளை (மே10) பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. காவல் துறையில் பின்னடைவு பணியிடங்கள் உட்பட 1078 எஸ்.ஐ., பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பொது ஒதுக்கீடு பிரிவினருக்கு வரும் 23ம் தேதியும், போலீஸ் துறை ஒதுக்கீடு பிரிவுக்கு 24ம் தேதியும் எழுத்து தேர்வு நடக்கிறது. பொது ஒதுக்கீடு பிரிவில், மொத்தம் 70 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடக்கும். இதில், பொதுஅறிவு பிரிவில் 40 மதிப்பெண்களுக்கு 80 வினாக்களும், உளவியல் பிரிவில் 30 மதிப்பெண்களுக்கு 60 வினாக்கள் என மொத்தம் 140 வினாக்கள் இடம் பெறும். இதுதவிர உடல்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண், நேர்முக தேர்விற்கு 10 மதிப்பெண், சிறப்பு மதிப்பெண் (என்.சி.சி., என்.எஸ்.எஸ்.,) ஐந்து என மொத்தம் நூறு மதிப்பெண்ணிற்கு தேர்வு நடக்கும். இரண்டரை மணிநேரம் தேர்வு நடக்கும். இந்த தேர்வில் பங்கேற்கும் வாசகர்களுக்கு வழிகாட்ட இந்நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது. திட்டமிட்டு தேர்வுக்கு எவ்வாறு தயாராவது, பதட்டமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி, படித்ததை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வது போன்ற அரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் கருத்துரை வழங்குகிறார். தினமலர் அளிக்கும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வாருங்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி