கத்திரி வெயில் நாளை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2015

கத்திரி வெயில் நாளை தொடக்கம்


"கத்திரி வெயில்' என பரவலாக அழைக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் இந்த ஆண்டுவரும் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 26 நாள்கள் நீடிக்கிறது.கோடையின் உச்சகட்டமாக அக்னி நட்சத்திர காலம் இருக்கும்.
தமிழகத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் குறைந்தபட்ச அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டாகவும் அதிகபட்சம் 106, 107 டிகிரியாகவும் இருக்கும். சில ஆண்டுகளில் இந்தக் காலகட்டத்தில் வெயில் 110 டிகிரி வரை இருந்துள்ளது.இந்தக் கோடையில், இதுவரை ஒரு சில நாள்கள்தான் 102 டிகிரிக்கு மேல் வெயில்பதிவாகி உள்ளது. வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதாலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாலும் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் உக்கிரம் குறைந்து காணப்பட்டது. அதேநேரத்தில், சென்னையில் மழை குறைவாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது.இந்த நிலையில், மே 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 29 ஆம் தேதி வரையான அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்று வீசும். பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத அளவு வெயில் உக்கிரமாகஇருக்கும்.சில ஆண்டுகளில் இந்தக் காலத்தில் பலத்த மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. அதுபோன்று இந்த ஆண்டு மழை இருந்தால் வெயிலின் அளவு குறையும்.இல்லையெனில் மே மாதம் முடியும் வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி