ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு:டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு:டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை


பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வைஅறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு மே, 31ம் தேதி நடத்தப்படுகிறது.இதற்கான அறிவிப்பு ஏப்., 22ம் தேதி வெளியானது. பின், இரண்டு நாட்களில் ஏப்., 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி அவசர, அவசரமாகத் துவங்கி, மே, 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட வாரியாக, இரண்டு முதல், நான்கு சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த போட்டித் தேர்வை, கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கல்வித்துறையின் தேர்வுத்துறைப்பிரிவு நடத்துகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., போன்ற, பணி நியமன அமைப்புகளை போல், விண்ணப்பிக்க போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை.மேலும், தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் வசதி வழங்காமல், சேவை மையங்களை அவசரமாக அமைத்து, அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வரச் செய்து, குளறுபடியான விண்ணப்ப முறை ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.இதனால், ஆசிரியர்கள், கல்வித்துறையினர், வேலைவாய்ப்புத் துறை நிபுணர்கள் இந்ததேர்வின் மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.*ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியிடங்கள் இருந்தாலும், அதை இவ்வளவு அவசரமாக நடத்த வேண்டுமா?*டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போல அறிவிப்பாணை வெளியான தேதியில் இருந்து, குறைந்தது, இரு மாதங்கள் கூட அவகாசம் வழங்காமல், 40 நாட்களில் தேர்வு நடத்த வேண்டுமா?

*கல்வித்துறையின் தேவைக்கு, கல்வித்துறையே நேரடியாக தேர்வு நடத்துவதால், நியாயமான தேர்வு மற்றும் பணி நியமனம் சாத்தியமா?

*பணி நியமனத்துக்காக உருவாக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி.,யை விட்டு, விட்டு, தாமாக தேர்வு நடத்தினால், மற்ற துறைகளும் அதேபோன்ற தேர்வு முறையை நடத்தும் வாய்ப்பு ஏற்படும்.*தேர்வு முறையில் அரசியல், ஆட்சியாளர் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.*உண்மையாக வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதே?இப்படிப்பட்ட பல சந்தேகங்கள், கல்வித்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ''அரசுத் துறை பணிகளில், தேர்வு செய்வதற்கு டி.என்.பி.எஸ்.சி., என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு பல நிபந்தனைகளை பின்பற்றி, ஆட்களை தேர்வு செய்யும். ஆனால், பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை தாங்களாகவே தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை இல்லாத வகையில், இத்தேர்வை, அரசுத் தேர்வுத்துறை நேரடியாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,''என்றார்.

25 comments:

  1. ஆளும் கட்சியினர் இப்போதே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டனர்.வேலை வாங்கித்தருவதாக பலர் புறப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. வசூல் வேட்டை 3,00,000

      Delete
    2. மூன்று முதல் ஐந்து லட்சம் வரை பேரம் நடைபெற்று கொண்டிருக்கிறது.மக்களே சிந்திப்பீர்கள் இவ்வளவு அவசர கோலத்தில் பணி நியமனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன.இந்த அவசரத்தை பள்ளிகளில் கழிப்பறை கட்டுவதில் காட்டவில்லையேஇந்த கல்வித்துறை? இதற்கெல்லாம் பதில் விரைவில் நீங்கள் சொல்லவேண்டியது உள்ளது.



      Delete
    3. Hi friends pls clarify my doubt.
      MBC/DNC/GNP. 25 seats ...
      MBC/DC/GP .15 seats
      இது எனது மாவட்ட காலி பணியிடம். இதில் நான்MBC/DC/GP (GENERAL TURN PRIORITY) .15 அப்ளை செய்துள்ளேன் ஒருவேளை நான் நல்ல மதிப்பெண் பெற்றால் முன்னுரிமை அடிப்படையில் மட்டும் தான் போக முடியுமா அல்லது GNP (GNERAL TURN NON PRIORITY) யிலும் போக முடியுமா. தயவு செய்து நண்பர்கள் உதவவும்

      Delete
  2. Good but its in the hands of the money makers

    ReplyDelete
  3. Good morning to all, time duration is must from notification date,

    ReplyDelete
  4. Cheating government.....tamilnadu education department activities are very bad....

    ReplyDelete
  5. பணம் இருந்தால் வேலை... இந்த வேலையை tnpsc க்கு மாற்றி exam நடத்தினால் படிப்பவர்களுக்கு மட்டும் வேலை.,

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Whether lab assistant canditates should apply only in native districts or could be also in their living place...

    ReplyDelete
  9. இதற்கு காரணம் எல்லாமே சபிதாதான். திருமதி சபிதா அவர்களே இப்படி தவறான பாதையில் கோடி கோடியாக சம்பாதித்து வாழ்க்கையில் என்ன சாதிக்க போறீங்க. நேர்மையான முறையில் நாலு பேருக்கு வேலை போடுங்க. புண்ணியம் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் உங்களுக்கே அது சந்தோஷமாக இருக்கும். நேர்மையாக வாழ்ந்துபாருங்கள் அதுல கிடைக்கற சந்தோஷம் வேற எங்கேயும் கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. Good sir...it s unmai...sankar....sakayam sir valka....

      Delete
    2. சபீதா அவர்கள் மீண்டும் கோர்ட்டின் படி ஏற வேண்டும் இந்த முறை அவர் அநேகமாக தண்டனைக்கு ஆளாக நேரிடும்.ஊழல் செய்வதற்கு ஒரு அளவே இல்லையா?

      Delete
  10. Sankar sir...you are correct...

    ReplyDelete
  11. Oru IAS kooda tn gov kku nalla vali solli tharthillai. Ithanal gov than ketta peyar.

    ReplyDelete
  12. 7 முதல் 10 வரை நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் வேட்டை வெற்றி நடை போடுகிறது..... 12மாதம் தான் உள்ளது ஆட்சி அதிகாரம் முடிய 12 தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டுமே...

    ReplyDelete
  13. 7 முதல் 10 வரை நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் வேட்டை வெற்றி நடை போடுகிறது..... 12மாதம் தான் உள்ளது ஆட்சி அதிகாரம் முடிய 12 தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்க வேண்டுமே...

    ReplyDelete
  14. if anybody want mutual transfer from vellore to trichy thanjavur pudhukottai pls condct me b.t english 7708460923

    ReplyDelete
  15. Sabitha madam yean continue ah education department mela ungaluku ivvalavu sincere podhum vittudunga neenga yevvalavo senchutenga aduthu varavangaluku oru chance kudunga unga kadamai unarchi kankalanga veikudhu...

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Education department sec should b a educationists .... She s not educationist but she s a best collector in the world.. When will give this govt best collector (money collector ) award her....

    ReplyDelete
  18. Sabeetha madam ippadi oru avasarsmana lab asst posting poduvatharku thudippatharku karanam kalvithurayulum panam sampathikka valivakuthu kodukkirar, kandippaka aduthu court pokavendiya situation varum, tn govt nadappil erukkiratha illai thoonkikondirukkiratha

    Oru doubt nan ICM priorityla erukken enakku ethil vaippu alikkappaduma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி