குரூப் - பி மற்றும் குரூப் - சி' பணிகளுக்காக, இந்தாண்டு நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான (சி.ஜி.எல்.இ.,) வயது வரம்பை, தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தேர்வு குறித்து, பணியாளர் தேர்வு ஆணையமான - எஸ்.எஸ்.சி., ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2015 ஆக., 1ம்தேதி அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக, ஏராளமான விண்ணப்பதாரர்களிடம் இருந்து, அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனால், இந்தாண்டு, ஜன., 1ம் தேதிநிலவரப்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை எட்டியவர்களுக்கும், ஒருமுறை சலுகையாக, தேர்விற்கு விண்ணப்பிக்க அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி