கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்-வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2015

கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்-வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்


கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில் நீதிமன்ற உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திஅரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கொடுக்கப்பட்டமனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் பலகோடி ரூபாய் கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்றுஉண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

வீரப்பன் மனைவி

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கத்தின்மாநில தலைவர் முனுசாமி வரவேற்றார். இதில் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கத்தின் மாநில தலைவி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு நீதிமன்ற உத்தரவின்படி 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்காமல் வேறு எந்தஒரு காலிப்பணியிடங்களுக்கான அரசு தேர்வும் தமிழகத்தில் நடைபெற கூடாது.

குறிப்பாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள பள்ளி ஆய்வாளர், நீதித்துறை பணியிடம் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையிடம் மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு மனு கொடுத்தாலும் அதன் மீது உடனடியாக காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கைகளை குறித்து மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி