சாதிச் சான்று இல்லாத பெற்றோரின் குழந்தைகளுக்கு பொது இ-சேவை மையங்களில் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.சாதி, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றிதழ்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தன.
இதில் ஏற்படும் காலதாமதம், மோசடிகளைக்களையும் வகையில், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு அமைப்பு மூலம் பொது இ-சேவை மையம் தொடங்கப்பட்டு, அவற்றில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சாதிச் சான்று இல்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு சான்றிதழ் வழங்காமல், மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ஆலங்குடி ஆர்.சொர்ணக்குமார் கூறும்போது, “சாதிச் சான்று இல்லாத பெற்றோரின் பிள்ளைகளுக்கு சான்று வழங்க முடியாது என 25 நாட்கள் கழித்துத்தான் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிராம நிர்வாக அலுவலரின் வாக்குமூலத்தை ஆவணமாகக் கருதி, சாதிச் சான்று வழங்க முன்வர வேண்டும்.
இது தொடர்பாக தமிழகமுதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.இ-சேவை மையத்தினர் கூறும்போது, “சாதிச் சான்று இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு சான்று வழங்குவது குறித்து அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களால்தான் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. நாங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கவில்லை” என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி