இடஒதுக்கீட்டுக்கு 25 சதவீதம் வழங்க பள்ளிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

இடஒதுக்கீட்டுக்கு 25 சதவீதம் வழங்க பள்ளிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்


`திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதத்தை இட ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும்’ என்று ஆட்சியர் மு. கருணாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி 2015-2016-ம் கல்வி ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சியர்தலைமையில், சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பேசியதாவது:

14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் தவறாது கல்வி கற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையின் போது வகுப்பில் சேர்க்கப்படவுள்ள மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் சேர்க்கை நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு இருக்க வேண்டும்.

இச்சட்டத்திலுள்ள வழிகாட்டுதலின்படி, 2015-2016-ம் கல்வி ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இட ஒதுக்கீட்டில் 100 சதவீத இலக்கினை எய்திட தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும், நலிவடைந்த பிரிவின் கீழ் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்க பெற்றோர்களுடைய ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.அதே போல, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவின் கீழ், குழந்தைகளுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினரைத் தவிர அனைத்துப் பிரிவினரும் சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து விண்ணப்பித்திட வேண்டும். மேலும், பிற வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட பிரிவின் கீழ் விண்ணப்பிக்க எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், அனாதைகள், சுகாதாரக் குறைவான பணிபுரிவோரின் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோர்களும் விண்ணப்பிக்கலாம்.எனவே, இச்சட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க பள்ளிகளில் நேரடியாகவும், பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற மறுத்தால் சம்மந்தப்பட்ட கல்வி அலுவலகங்களின் மூலமாக விண்ணப்பிக்கலாம். 25 சதவீதத்துக்கு மேலான விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ள பள்ளிகளில் அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்’ என்றார் ஆட்சியர்.மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் இரா.பிச்சை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா, முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வித் திட்டம்) வி.துரைசாமி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் எஸ்.பாலா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ச.மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு) மாணவர் சேர்க்கையின் போது வகுப்பில் சேர்க்கப்படவுள்ள மாணவர்கள் எண்ணிக்கையில் 25 சதவீதம் சேர்க்கை நலிவடைந்த பிரிவினரின், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி