கர்நாடகத்தில் அரசு பள்ளி–கல்லூரிகளில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடுத்த மாதத்துக்குள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

கர்நாடகத்தில் அரசு பள்ளி–கல்லூரிகளில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடுத்த மாதத்துக்குள் நியமனம் மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

கர்நாடகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடுத்த மாதத்துக்குள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று மந்திரிகிம்மனே ரத்னாகர் கூறினார்.கர்நாடக கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முன்னுரிமை வழங்கப்படும்அடுத்த ஆண்டு முதல் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்கும் இடங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சில தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சரிவர சேர்ப்பது இல்லைஎன்று புகார்கள் வருகின்றன. இதுகுறித்து பரிசீலித்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பெற்றோர்களில் சிலர் தவறான முகவரி கொடுத்து குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இதனால் அதே பகுதியை சேர்ந்த வேறு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தவறான முகவரி கொடுத்து குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதை கட்டுப்படுத்த அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

11 ஆயிரம் ஆசிரியர்கள்

கல்வித்துறையில் 28 ஆயிரம் பணி இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில் அரசு தொடக்க, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் 11 ஆயிரம் ஆசிரியர்கள் அடுத்த மாதத்துக்குள் நியமனம் செய்யப்படுகிறார்கள். மீதியுள்ள காலியிடங்கள் தேவைக்கு ஏற்ப படிப்படியாக நிரப்பப்படும்.தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருந்தாலும் இதுபற்றி ஆய்வு செய்து, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் அத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லை பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வருகிற 24–ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும். அடுத்த மாதம் 15–ந் தேதிக்குள் பெலகாவி, கொப்பல் மற்றும் வடகர்நாடக பகுதிகளில் சீருடைகள் வழங்கப்படும்.

நிதி குறைப்பு

இந்த ஆடைகளை தயாரிக்கும் பணி நெசவாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் விரைவாக ஆடைகளை தயாரித்து கொடுப்பதாக முதல்–மந்திரியிடம் உறுதி அளித்துள்ளனர். அதனால் அடுத்த மாதம் 15–ந் தேதிக்குள் அனைத்து பகுதியிலும் ஆடைகள் வழங்கப்பட்டுவிடும்.‘சர்வ சிக்ஷ அபியான்’ திட்டத்தின் கீழ் மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட நிதியை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.

இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி