தேர்வு முறைகேடு விவகாரம்உடற்கல்வி ஆசிரியர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

தேர்வு முறைகேடு விவகாரம்உடற்கல்வி ஆசிரியர் கைது

ஓசூரில், 'வாட்ஸ் ஆப்' மூலம், பிளஸ் 2 கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக, அரசு உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - -தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், கடந்த மார்ச், 18ம் தேதி காலை நடந்த பிளஸ் 2 கணிதத் தேர்வில், முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
முறைகேடு விவரம்தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றியதனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர், தங்களது மொபைல் போன் மூலம், கணித வினாத்தாளை புகைப்படம் எடுத்து, அதை, 'வாட்ஸ் ஆப்' மூலம், சக ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பினர்.இந்த விவகாரம் தொடர்பாக, அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, எட்டு பேரை,போலீசார் கைது செய்தனர்.

தற்போது, அனைவரும், ஜாமினில் வெளியே உள்ளனர்.ஐந்து பேர் 'சஸ்பெண்ட்'இந்த விவகாரம் தொடர்பாக, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகன் தன்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர்,புக்கசாகரம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலக இளநிலை உதவியாளர் ரமணா உட்பட, ஐந்து பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இதனால், இவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.

இதையடுத்து, வேதகன் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேதகன் தன்ராஜிற்கு மட்டும் முன்ஜாமின் வழங்கியது. மாதுவிற்கு முன்ஜாமின் வழங்காததால், அவர் தலைமறைவானார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று, மாதுவை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி