பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள்

விழுப்புரத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி முகாம் நடந்தது.சர்வதேச யோகா தினத்தை யொட்டி தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தினந்தோறும் பகல் 12:15 மணி முதல் 12:45 வரை யோகா வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்க அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை யொட்டி விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த முகாமில், மனதை அமைதிபடுத்தும் முறை, சுவாச பயிற்சி, கை, கால் அசைவுகள் உட்பட பல யோகாசார்ந்த பயிற்சிகளை ஈஷா யோகா பயிற்சியாளர் ஆனந்தமூர்த்தி வழங்கினார்.

இதில் 200 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலன், மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் பத்மநாபன் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி