ஆன்-லைன்' முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை, முழுமையாக செயல்படுத்த முடியாத நிலையில், உடனடியாக விடுபட்டுள்ள ஆசிரியர்களின் விபரங்களை பதிவு செய்ய தொடக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், நடப்பு மாதம் முதல் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் ' இ-பே -ரோல்' எனும் முறையில், ஆன்-லைனில் வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தொடக்க கல்வித்துறையில், கடந்த சில மாதங்களாக ஆசிரியர்களின் விபரங்களை, குறிப்பிட்ட வலைதளங்களில், பதிவு செய்யும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன. இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் யூசர் ஐ.டி., பாஸ்வோர்டு வழங்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களின் தகவல்கள் சமர்ப்பிக்கப்படாததால், ஆன்-லைன் முறையில் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, விடுபட்டுள்ள அனைத்துஆசிரியர்களின் விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், விபரங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் இருப்பின்அதனையும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி