கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப்பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2015

கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப்பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன

பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

மாநிலக் கல்வி ஆராய்ச்சி,
பயிற்சி நிறுவனம் சார்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இதுகுறித்து மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தி:ஆண்டுதோறும் இதுபோன்ற பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.இதுபோல, 2015-16 கல்வியாண்டில் தொடக்க, உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கில மொழி பயிற்சிகள் மட்டுமின்றி கணிதம் கற்பித்தல் பயிற்சி, அறிவியல் பயிற்சி, சமூக அறிவியல் பயிற்சி, உடற்கல்வி, அது சார்ந்த செயல்பாடுகளுக்கான பயிற்சி என 14 வகையான பயிற்சிகள் வழங்கப்படஉள்ளன.

மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ள இந்தப் பயிற்சிகளின் மூலமாக ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுவதோடு, கூர்ந்து ஆராயும் திறனும், மொழித் திறனில் வல்லமையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி