சென்னை பிளஸ்–2 மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2015

சென்னை பிளஸ்–2 மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.

மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ளும் மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள்.


தற்போது அண்ணா நகரில் உள்ள ராங்கி மார்ஸ் நிறுவனத்தார் பிளஸ் – 2 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறும் வகையில் வினா – விடைகளை சி.டியாக தயாரித்து உள்ளார்கள். 10–ம் வகுப்பு மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் 10–ம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கும் உரிய வினா – விடைகள் எளிதில் புரியும் வண்ணம் சி.டியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் 12–ம் வகுப்புக்கான இயற்பியல், வேதியில், தாவரவியல், உயிரியல் பாடங்களின் வினா – விடைகள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சி.டிக்களாக தயாரிக்கப்பட்டு உள்ளது. ராங்கி மார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளஇந்த சிடி வெளியீட்டு விழா வருகிற 29–ந் தேதி காலை 6 மணிக்கு அண்ணாநகரில் நடக்கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு வினா – விடை சிடியை வெளியிடுகிறார். இது குறித்துஅண்ணாநகர் ராங்கி மார்ஸ் சிறப்பு பயிற்சி மற்றும் ஹைடெக் அகாடமியின் மானேஜிங் டைரக்டர் சிவபிரகாசம் கூறுகையில், 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிதில் புரியும் வகையில் வினா – விடைகளை சிடியாக உருவாக்கி உள்ளோம். தகுதி, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடியை பயன்படுத்தும் மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி என்று கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி