தமிழகம் முழுவதும் ஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம் :அரசு ஊழியர் சங்கம் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

தமிழகம் முழுவதும் ஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம் :அரசு ஊழியர் சங்கம் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 2-இல் ஆர்ப்பாட்டமும், 22-இல் பேரணியும் நடைபெற உள்ளதாக, அதன் பொதுச்செயலர் ரா.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக பதவியேற்றால் புதிய ஓய்வூதியத்திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்டகோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. வரும் 2016ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றாலும், பிப்ரவரி மாதமே அதற்கான பணிகள்தொடங்கி விடும். எனவே எங்களது கோரிக்கைகளை தீவிரமாக வலியுறுத்த வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

இதற்காக ஜூலை 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 22 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் பேரணிநடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 2003 ஆம் ஆண்டு நடந்தது போன்று தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி