வாட்ஸ் அப்பில் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

வாட்ஸ் அப்பில் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம்.

துபாயில் வாட்ஸ் அப் மூலம் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதிக அளவிலான வேலைவாய்ப்பு அளிக்கும் நாடாகவும் விளங்கி வருகிறது.
ஆனால் அங்கு அளிக்கப்படும் இலவச வைபை வசதியை பயன்படுத்திக்கொண்டு மற்றவர்களை திட்டுவதும், அந்நாட்டைப் பற்றி மோசமான செய்திகளை பகிர்ந்து கொள்வது போன்ற தவறான செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி வாட்ஸ் அப் மூலமாக யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திரிஹம் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 லட்சம்) அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி