சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தச் சங்கத்தின் மாவட்ட ஆண்டு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாரங்கன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள்:
சத்துணவு ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

மேலும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஒட்டுமொத்தத் தொகை, சிறப்பு சேமநிதி ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத் தொகையை ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும். 2006-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் தர ஊதியத்தையும் இணைத்து குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி