4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 4 வாரத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மறு தேர்வு நடத்த கால அவகாசம் கோரி சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
4 வாரங்களில் மறு தேர்வு நடத்துவது சாத்தியமில்லை எனவும் 3 மாதங்களாவது கால அவகாசம் தேவை எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மனுவை ஆராய்ந்த நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்பதாகஅறிவித்துள்ளது.கடந்த மே மாதம் சிபிஎஸ்இ சார்பில் நாடு முழுவதும் அகில இந்திய முதல்நிலை மருத்துவ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும் சிபிஎஸிக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி