சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி: அண்ணாமலைப் பல்கலையில்நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி: அண்ணாமலைப் பல்கலையில்நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழியல்துறை தலைவர் அரங்க.பாரி தெரிவித்தார்.


சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 15, 16 தேதிகளில் நடைபெற்றது. நேர்காணலில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் பட்டம் பெற்றவர்கள் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.அண்ணாமலைப் பல்கலைக்கு வருகை தந்த சிங்கப்பூர் எஜூகேர் (Educare) நிறுவனத்தைச் சேர்ந்த ஜோய்ப் ஏஞ்ச் (Joype Ange) தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு முதல் சுற்று நேர்காணலை நடத்தியது. இந்த நேர்காணலில் முதல் சுற்றில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவர் அரங்க.பாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி