TNPSC:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2015

TNPSC:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS

1.முதலில் ஏதேனும் ஒரு தேர்வுக்கு மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.டி.என் .பி.எஸ் .சி தேர்வுக்கு 3 மாதம் படிப்பது,வங்கி தேர்வுக்கு மூன்று மாதம் படிப்பது ,பின் SSC க்கு படிப்பது இவற்றை தவிருங்கள்.ஏனெனில் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அணுகு முறையை கொண்டது .ஆற்றில் ஒருகால்சேற்றில் ஒருகால் போக்கு வேண்டாம் .அது வெற்றி காலத்தை அதிகப்படுத்தும்.வயதும் வீணாகும் .

2.தேர்வு வாரியத்தின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வையுங்கள் .அதாவது தேர்வு ஒழுங்காக நடக்குமா ?நேர்மையாக நடக்குமா ?என அரை மனதுடன் இல்லாமல்முழுமையான நம்பிக்கை வையுங்கள் .தற்போது டி என் பி.எஸ் சி சிறப்பாக செயல் பட்டு வருகிறது .
3.உங்கள் மீது அதீத நம்பிக்கை வையுங்கள் .என்னால் முடியாது என்றால். வேறுயாராலும் முடியாது என்ற நம்பிக்கை யை உங்கள் மனதில் ஏற்படுத்துங்கள் .
4.லட்சக்கணக்கான போட்டியாளர்கள் இருக்கிறார் கள் என்பதை மறந்து விடுங்கள்.அது நமக்கு நம்பிக்கை தளர்ச்சி யை ஏற்படுத்தும் .ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை என்பதை மனதில் வையுங்கள் .
5.சிலபஸை கையில் வைத்துக்கொண்டு படியுங்கள் .நாம் பாடங்கள் முடிக்க முடிக்க நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்
6.குறிப்பு எடுத்துக்கொண்டு படியுங்கள் .அது பாடத்தை மறக்க செய்யாது.கடினமான கேள்விக்கு இந்த முறையில் படிப்பது பெரிதும் கை கொடுக்கும் .
7.பொது அறிவுக்கு ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தமிழ் பகுதிக்கு 4 மணிநேரம் கணிதம் பகுதிக்கு 2 மணிநேரம் ,செய்திதாளுக்கு 1 மணிநேரம் ஒதுக்குங்கள் .
8.ஏதாவது ஒரு பயிற்சி மையத்திற்கு செல்வது நலம் .குறைந்தது மாதிரி தேர்வுஎழுதவாவது செல்லுங்கள் .அப்போதுதான் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்என்று உங்களுக்கு தெரியும் .உங்கள் பலவீனமான பகுதி எது ?அதை எப்படி சரிசெய்வது என்ற ஐடியா அங்கு தான் கிடைக்கும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி