மாணவர்களின் விளையாட்டுக்கு அனுமதி உண்டா: உடற்கல்வி ஆசிரியர்கள் ஏக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

மாணவர்களின் விளையாட்டுக்கு அனுமதி உண்டா: உடற்கல்வி ஆசிரியர்கள் ஏக்கம்.

பள்ளிகளில் பெயருக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், மாணவர்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த நிலை மாறி, தற்போது பள்ளிகளில் எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் பெரும்பாலும் அலுவல் சார்ந்த பணிகளை செய்வதற்கே அனுமதிக்கப்படுகின்றனர்.அவர்கள் கூறியதாவது:

காலையில் இறைவணக்கத்தின் போதுமாணவர்களை ஒழுங்குபடுத்துவது, வகுப்பறையில் மற்ற ஆசிரியர்கள் வராத நேரத்தில் கவனித்துக் கொள்வது, பள்ளி சார்ந்த வெளி வேலைகளுக்கு தான் எங்களைபயன்படுத்துகின்றனர். இதையும் தாண்டி மாணவர்களுக்கு பயிற்சியளித்து விளையாட்டுக்கு தயார் செய்கிறோம். சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் விளையாட்டை ஊக்கப்படுத்துவதில்லை. மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதையும் அனுமதிப்பதில்லை. வாரம் ஒருநாள் உடற்கல்வி வகுப்பு இருந்தால் கூட மாணவர்கள் விளையாட்டுக்கு தடை போடுகின்றனர்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வியைத் தவிர வேறு கதியே இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் யோகா, தியானம், கேரம், செஸ் விளையாட்டுகளையும், மற்ற பள்ளிகளில் விளையாட்டையும் ஊக்கப்படுத்த தலைமையாசிரியர்கள் முன்வரவேண்டும். மாவட்ட உடற்கல்வி அலுவலகம் மூலம் மாணவர்களின் விளையாட்டு நேரத்தை உறுதிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களுக்கும் விளையாட்டு என்பதே மறந்துவிடும், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி