பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2015

பள்ளி புத்தகத்தில் கருணாநிதி, 'மாஜி' அமைச்சர் பெயர்: பக்கங்களை நீக்க அதிகாரிகள் ஆலோசனை.

தமிழக பாடநுால் கழகத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்களில் முன்னாள்முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெயர்களை நீக்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில்,
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 2011 முதல், சமச்சீர்க்கல்வி பாடத்திட்டம் அமலில் உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் இன்னும் மாற்றப்படவில்லை. இந்நிலையில், பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 பொருளியல் பாடத்துக்கான, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகங்களின் முகவுரையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  நான்கு ஆண்டுகளாக, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கண்ணில் படாத இந்தப் பக்கங்கள், தற்போது அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்: கடந்த,2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்கள், 2006ல் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்தப் புத்தகங்கள், பத்து ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக இருந்த நாகநாதன், தலைமையிலான குழு, இந்த புத்தகங்களை உருவாக்கியது. அதனால்,நாகநாதன் எழுதிய முகவுரையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறிஉள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில் பாடத்திட்டம் மாற்றப்படாததால், பழைய புத்தகமே அப்படியே அச்சடிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பெயர்கள் இடம் பெற்று உள்ளன. தற்போது,முகவுரை பக்கத்தை என்ன செய்வது என்று, ஆலோசனை நடந்து வருகிறது. அரசு முடிவுப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கவும், கடைகளில் விற்பனை செய்யவும் உள்ள பிளஸ் 1 பாட புத்தகத்தில், முகவுரை பக்கங்களை நீக்குவது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி