'ஸ்மார்ட்' கார்டு வடிவில் மாணவர் இலவச பஸ் பாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2015

'ஸ்மார்ட்' கார்டு வடிவில் மாணவர் இலவச பஸ் பாஸ்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அட்டை வழங்க அரசு திட்டமிட்டது. இதற்காக மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்தது.
2015-16 கல்வியாண்டில் இந்த 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப்படும் என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர்.
ஒரு சில நிர்வாக காரணத்தால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.பழைய திட்டப்படியே மாணவர்களுக்கு பஸ் பாஸ் ஏற்பாடு செய்து கொடுக்க அரசு உத்தர விட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாணவரின் பெயர், முகவரி, பெற்றோரின் தொழில், ரத்த வகை, உட்பட பல்வேறு புள்ளி விவரங்களுடன் கூடிய 'ஸ்மார்ட்' கார்டு வழங்க ஏற்பாடு நடந்தது. இக்கார்டிலுள்ள தகவல்கள் ஆன்-லைனில் பதிவு செய்யப்படும். ஒரு மாணவர் பற்றிய விவரம் அறிய கார்டு மட்டும் இருந்தால் போதும் . இதற்கான இயந்திரத்தில் பொருத்தினால் அனைத்து தகவல்களை பெற முடியும்.இதற்கான பணி முடியாததால் ,இவ்வாண்டு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழைய திட்டப்படியே அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பெற்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் இலவச பஸ் பாசை உடனே பெற அரசு அறிவுறுத்தியுள்ளது, என்றார்.
மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில் திட்டம் நிறைவேறுமா? அல்லது கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி