கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்.

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பெயர் இடம்பெற்ற, பிளஸ் ௧ பொருளியல் பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்ட புத்தகங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இப்பாடப் புத்தகத்தின் முகவுரையில், கருணாநிதி மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதை சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்து, பாடநுால் கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 'பாடத்திட்டம் மாறாததால், புத்தகமும் மாறவில்லை' என, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த புத்தகங்களை, மாணவர்களிடமிருந்து திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடம் இருந்து, பொருளியல் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதற்கு பதில், முகவுரை இல்லாத புத்தகங்கள் வினியோகம் துவங்கியுள்ளது. தமிழக அரசின் பாடநுால் கழக அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2, பொருளியல் புத்தகங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. 'புதிய திருத்தப்பட்ட புத்தகங்கள், விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி