"கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2015

"கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

"கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் "ஹாக்' செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள்,
மற்றவர்களின் "லாக் இன்' விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள்.
எனவே நமது கணக்கு விபரங்கள் திருடப்படாமல் இருக்க நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி உள்ளது.உங்களுடைய கூகுள் கணக்குகள் "ஹாக்' செய்யப்படாமல் இருக்க இதோ சில யோசனைகள்.1.வலிமையான கடவுச்சொல் (பாஸ்வேர்டு) அவசியம். உங்களுடைய கூகுள் கணக்குகளை கையாளப் பயன்படும் கடவுச் சொல், மற்றவர்களால் எளிதில் கணிக்க முடியாதவாறு வலிமையானதாக இருக்க வேண்டும்.ஆங்கில எழுத்துகளில் பெரிய எழுத்துக்களும், சிறிய எழுத்துக்களும் கலந்து வரும் படி இருக்கலாம். சில எண்களையும், சிறப்பு எழுத்துக்களையும் சேர்க்கலாம். ஆனால், பிறந்த வருடத்தைக் குறிக்கும் எண்களைத் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் பரவலாகப் பயன்படுத்தும், "பாஸ்வேர்டு', "பேட்மேன்' போன்ற கடவுச் சொற்களை தவிர்க்க வேண்டும்.கூகுள் கணக்குகளை பயன்படுத்தும் போது, இரண்டு கட்ட லாக்-இன்களை பயன்படுத்துவது உங்களுடைய கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும். இரண்டு கட்ட "லாக்-இன்'-ஐ, கூகுள் செட்டிங்கில் தேர்வு செய்து கொள்ளலாம்.உங்களுடைய கூகுள் கணக்கை யாராவது "ஹாக்' செய்து விட்டால், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த லாக்-இன் விவரங்களை பயன்படுத்த முடியாது. இந்நிலையில மீட்பு மின்னஞ்சல் முகவரியை கூகுளுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தால், அதன் மூலம் கணக்கை திரும்பப் பெற முடியும்.கூகுளில் உள்ள, கணக்கு செயல்பாடு விவரங்கள் என்ற அம்சத்தின் மூலம் கடைசியாக உங்களுடைய கணக்கை எங்கே, எப்போது பயன்படுத்தினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத கம்ப்யூட்டர் மூலம் கணக்கு ஆப்ரேட் செய்யப்பட்டிருந்தால் அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
எப்போதாவது சந்தேகப்படும்படியாக மற்ற கம்ப்யூட்டர்களில் கணக்குகள் லாக்-இன் செய்யப்பட்டிருந்தால், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை கூகுள்அனுப்புகிறது. இதைப் பயன்படுத்தி நாம் நம்முடைய லாக்-இன் விவரங்களை மாற்றி விடலாம்.கூகுள் லாக்-இன் விவரங்களை பயன்படுத்தும் மற்ற செயலிகளையும், வலைதளங்களையும்கவனத்துடன் கையாள வேண்டும். நாம் செயலிகளையோ அல்லது இணையதளங்களையோ பயன்படுத்தாமல் இருந்தால் கூட, லாக்-இன் விவரங்கள் அவற்றில் பதிவாகி இருக்கும். எனவே, லாக்-இன் விவரங்களை, அந்த செயலிகளில் இருந்தும், வலைதளங்களில் இருந்தும் மறக்காமல் நீக்கி விட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி