பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, இரண்டு பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும், 'பிட்' பிரச்னையில் சிக்கிய ஐந்து ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு,திரும்பப் பெறப்பட்டுள்ளது;
ஏழு பேரும் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.தேர்வு மையம்:பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, ஓசூர் தனியார் பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்புப் பணியில் இருந்த ஆசிரியர்கள், மகேந்திரன், கோவிந்தன், மொபைல் போன், 'வாட்ஸ் அப்' மூலம் வினாத்தாளை பகிர்ந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு ஆசிரியர்களை கைது செய்தனர். இந்த விவகாரத்தில், ஓசூர் மாவட்டக் கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஓசூர் கல்வி அலுவலகஊழியர்கள் சந்திரசேகர், ரமணா, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.'வாட்ஸ் அப்' விவகாரத்தைத் தொடர்ந்து, தேர்வு அறைகளில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது மாணவர்களிடம், 'பிட்' பிடிபட்டதால், கண்காணிப்புப் பணியில் இருந்த, தேனி மாவட்டம், வைகை அணை அரசு பள்ளி ஆசிரியர் செல்வன், வடுகப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் வடிவேல், லட்சுமி நாராயணன், தஞ்சை மற்றும் நாகையில் தலா, ஒரு ஆசிரியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.பள்ளிக்கல்வி அலுவலர்களும் தேர்வுத்துறை இயக்குனரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், புதிய கல்வி ஆண்டு நேற்று துவங்கிய நிலையில், கிருஷ்ணகிரி டி.இ.ஓ., அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர், முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் அசோக்குமார், தேனி மாவட்ட ஆசிரியர்கள் செல்வன், வடிவேல், லட்சுமி நாராயணன் மற்றும் தஞ்சை, நாகை மாவட்ட, இரண்டு ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு விலக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல்:ஆசிரியர்கள் அனைவரும் வழக்கம்போல், நேற்று மீண்டும் பணிக்கு சென்றனர். பள்ளிக்கல்வி அலுவலர்களும் தங்கள் பணிகளில் சேர்ந்து விட்டதாக, தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி