தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கும் பணியைச் செய்து வருகிறது.தமிழக அரசால் நடத்தப்படும் இசைப் பள்ளியில் 3 ஆண்டு சான்றிதழ் படிப்பில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய கலைப் பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட பிரிவுகளில் 2015-16-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. காஞ்சிபுரம், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து இசை ஆர்வம் மிக்க மாணவ, மாணவிகள், கோட்டைக்காவல் கிராமம், சதாவரம் ஓரிக்கை, என்ற முகவரியில் இயங்கும் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து பயன் பெறலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Play Three Players Games Online, 3 Players Games for kids, Y8 3 Players Games, Pog 3 Players Games, Online 3 Players Games - all online three player games 3 Players
ReplyDelete