முதுநிலை மருத்துவப் படிப்பு: புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

முதுநிலை மருத்துவப் படிப்பு: புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க புதிய கலந்தாய்வு அட்டவணையை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.
புதிய கலந்தாய்வு அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளத்தில்  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீடு) ஆகியவற்றில் முதுநிலை மருத்துவப் படிப்புகளின காலியிடங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று முதல் மீண்டும் கலந்தாய்வு: 
முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு (எம்.சிஎச்.-நியூரோசர்ஜரி) ஆகியவற்றுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் மீண்டும் புதிய 3-ஆம் கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 6), ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெற உள்ளது.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் மேலே குறிப்பிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவப் படிப்பு இடங்களை ஒதுக்கீடு செய்வதில் நிர்வாக ரீதியாக பிரச்னை ஏற்பட்டதையடுத்து, அது முழுமையாக ரத்து செய்யப்பட்டு சனிக்கிழமை முதல் மீண்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
எம்.டி.எஸ். கலந்தாய்வு செல்லும்:
எனினும் எம்.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஏற்கெனவே நடத்தப்பட்ட கல்ந்தாய்வு செல்லுóம் என்றும் எம்.டி.எஸ். படிப்புக்கு மீண்டும கலந்தாயவு நடத்தப்பட மாட்டாது எóன்றும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி