அரசு சேவை இல்லப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2015

அரசு சேவை இல்லப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் விதவைகள், ஆதரவற்றோர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் 14 வயது முதல் 45 வயது வரையுள்ள மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 24,000-க்குள் உள்ள விதவைகள்,
கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற மகளிர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மகளிர் ஆகியோருக்குப் பொதுக் கல்வி (6 முதல் 12-ம் வகுப்பு வரை) தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளியில் சேரும் மாணவிகளுக்கு உணவு, உடை, உறைவிடம், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், தேர்வுக் கட்டணம் ஆகியவை அரசு இலவசமாக வழங்குகிறது. ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ள 6, 9, 11-ம் வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு 04362 - 255287. 258501 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி