தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2015

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது. இந்த பண்டுகளில்முதலீட்டை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் கே.கே.ஜலான் குறிப்பிடும்போதுவருங்கால வைப்பு நிதியின் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியிலிருந்து5 சதவீத தொகையை நடப்பாண்டில் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார். வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்புநிதி நடப்பாண்டில் ஒரு லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.

இதிலிருந்து ரூ.5000 கோடியை இடிஎப் திட்டங்களில் நடப்பாண்டில் முதலீடு செய்யப்படும் என்றார். வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு முன்பு மாநில அரசு மற்றும் மத்திய அரசு பத்திரங்களில் வைப்பு நிதி ஆணையம் முதலீடு களை மேற்கொண்டு வந்தது. தொழிலாளர்அமைச்சகம் வழங்கிய அனுமதியின்படி ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் 15 சதவீதம் வரையிலான தொகையை பங்கு மற்றும் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

இதனடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியின் 5 சதவீதத்தை நடப்பாண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். முதலீட்டு தேதி நிலவரப்படி ரூ.5,000 கோடிக்கும் குறைவான சந்தை மதிப்பை அந்த நிறுவனம் கொண்டிருக்க கூடாது. மேலும் செபியின் அனுமதி பெற்ற மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்யலாம். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தைகளில் குறைந்தபட்சம் 65% முதலீடுகளை செய்துள்ள பண்டு நிறுவனங்களில்முதலீடு செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி