பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணன் தாக்கல் செய்த அந்த மனுவில்,
தமிழக பள்ளிகளில் காலியாகவுள்ள 4ஆயிரத்து 362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 30-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
8 லட்சம் பேர் வரை எழுதிய அந்த தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண், நேர்முக தேர்வுமதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணிக்கு தேர்வு நடைபெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. ஆய்வக உதவியாளர் தேர்வு எழுதிய 4 பேர், பணி நியமன தேர்வில் எழுத்து தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete