அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2015

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?

பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பிளஸ் 1,பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக,
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தத் துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வுசெய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது.இந்தப் பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியது.அதன் பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், பல மாதங்களாக இந்தப் பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், அடுத்தகல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால்,புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், அடுத்தக் கல்வியாண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமலாக வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

3 comments:

  1. http://saraleducationalacademy.blogspot.in/

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.தொலைத்தூரக் கல்வி வழங்குவதற்காக திருத்தணி நகரில் சாரல் கல்விக் கழகம் துவங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


    பின்வரும் கல்விச் சேவைகள் நமது சாரல் கல்விக் கழகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.


    1. தமிழ்ப் பல்கலைக்கழகம் - தொலைத்தூரக் கல்வி மையம்

    2.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - தொலைத்தூரக் கல்வி மையம்

    3. நேரடி சேர்க்கை மையம் :

    வழக்கறிஞர் ( LLB ) கல்வி நேரடி சேர்க்கை மையம்
    MCA - கல்வி நேரடி சேர்க்கை மையம்
    MBA - கல்வி நேரடி சேர்க்கை மையம்
    M.E - கல்வி நேரடி சேர்க்கை மையம்
    M.Ed - கல்வி நேரடி சேர்க்கை மையம்
    M.Phil - கல்வி நேரடி சேர்க்கை மையம்

    தொடர்புக்கு :





    சாரல் கல்விக் கழகம்
    எண்: 345, சித்தூர் சாலை,அமிர்தாபுரம்,
    மேல் திருத்தணி- 631 209.
    ( தீயணைப்பு நிலையம் அருகில்)

    கைப்பேசி- 81220 18667 / 766 777 52 59

    ReplyDelete
  3. NANBARGALE 669 ADI DRAVIDAR VALAKKIL APRIL 16 ENNA THEERPPU

    SONNANAGA?


    * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

    PIRAGU SC & SCA KONDU NIRAPPI KOLLALAM ENDRA?


    * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

    PIRAGU BC KONDU NIRAPPI KOLLALAM ENDRA?


    * 70 % SC & SCA IPPOTHU NIRAPPI KOLLALAM MEETHI 30% VALAKKU MUDINTHA

    PIRAGU ALL CASTE(GENARAL RESERVATION) KONDU NIRAPPI KOLLALAM

    ENDRA?

    OR


    MARUPADIYUM CASE VANTHAL (FINISH AANAL) 30% POSTING YARUKKU

    * SC SCA ?

    * BC?

    * ALL CASTES ?




    PLEASE TELL ME ANY ONE

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி