10 லட்சம் 'ஆடிட்டர்'கள் தேவையாம்படிப்பவர்களுக்கு அடிக்கிறது யோகம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2015

10 லட்சம் 'ஆடிட்டர்'கள் தேவையாம்படிப்பவர்களுக்கு அடிக்கிறது யோகம்!

''இந்தியாவில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர்,'' என, ஐ.சி.ஏ.ஐ., துணைத்தலைவர் தேவாரெட்டி தெரிவித்தார்.சேலம், 'சார்ட்டட் அக்கவுன்ட்' பயிற்சி மையத்தில் படிப்பு முடித்தோருக்கு, சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று நடந்தது.


இதில், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய சார்ட்டட் அக்கவுன்ட் பயிற்சி மைய துணைத் தலைவர் தேவாரெட்டி, மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய சார்ட்டட் அக்கவுன்ட் அமைப்பு, அரசுக்கும், மக்களுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை, ஆரம்பத்தில், 1,700 ஆக இருந்தது, தற்போது, 2.37 லட்சமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும், 150 பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில், எட்டு லட்சம் பேர் படித்து வருகின்றனர்.ஆடிட்டர் துறையில், வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. துபாய், குவைத், மஸ்கட், சவுதி அரேபிய நாடுகளில், 20 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர்.வெளிநாடு மட்டுமின்றி, உள்நாட்டில், ரயில்வே, நிதித்துறை, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.அதிக சம்பளம் பெறுவதற்கான வாய்ப்பு, இத்துறையில் உள்ளது. இன்னும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், நாட்டில், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர். இதை, கடினமான படிப்பு என்று கூற முடியாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி